விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! |

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர வாரிசு நடிகர் ரன்பீர் கபூர் கடந்த வருடம் வெளியான அனிமல் படத்தின் வெற்றி மூலம் ஆயிரம் கோடி வசூலை நெருங்கிய இளம் பாலிவுட் நடிகர் என்கிற பெயரையும் பெற்றவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இருக்கும் நட்பு பற்றி கூறியுள்ளார் ரன்பீர் கபூர். தான் சிறுவயதில் அதாவது பத்தாம் வகுப்பு முடித்திருந்த காலகட்டத்தில் தனது தந்தை ரிஷி கபூருக்கு உதவியாக அவர் முதன் முதலாக டைரக்ட் பண்ணிய படத்தில் பணியாற்றியபோது அதில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராய் தன்னை ஒரு சிறுவன் என நினைக்காமல் நண்பனாகவே பழகினார் என்று கூறியுள்ளார் ரன்பீர் கபூர்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “அந்தப்படத்தில் பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரங்களில் எப்போதும் என்னுடன் தான் ஐஸ்வர்யா ராய் பேசிக் கொண்டிருப்பார். பள்ளிக்கூடம் செல்லும் சிறுவன் தானே என்று என்னை நினைத்ததில்லை. அவரைப் பற்றிய பல தகவல்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். அதன் பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து நான் நடித்த ஏ தில் ஹே முஸ்கில் என்கிற படத்தில் அவர் நடித்த போது கூட சிறுவயதில் என்னை எப்படி நடத்தினாரோ, பழகினாரோ அதேபோலத்தான் பழகினார். இத்தனை வருடங்களில் அவரிடம் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.