கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா |
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜிகர்தண்டா திரைப்படம் தற்போது அதன் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில் உருவாகி தீபாவளி வெளியீடாக இன்று (நவ-10) வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே பல இடங்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தனர் ஜிகர்தண்டா படக்குழுவினர்.
அந்த வகையில் கேரளாவுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் அங்கே மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதை கேள்விப்பட்டு படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று மம்முட்டியை சந்தித்துள்ளனர். மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா ஆகிய படங்களை இயக்கியவரும் புலி முருகன் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவருமான இயக்குநர் வைசாக் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பில் மம்முட்டியை சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களைப் பெற்று திரும்பினார்கள் லாரன்ஸும் எஸ்ஜே சூர்யாவும். மம்முட்டியை சந்தித்தது குறித்து எஸ்ஜே சூர்யா கூறும்போது, “எங்களை சந்தித்ததற்கு மிகப்பெரிய நன்றி. அவ்வளவு ஒரு சிறப்பான நேரமாக அது இருந்தது. மம்முட்டி சாரின் டைம்லி ஜோக்குகள் சிரிக்க வைத்தது. வாட் எ எனர்ஜி” என்று கூறியுள்ளார்.