ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
ஷங்கர் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், அர்ஜூன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு மற்றும் பலர் நடித்து நவம்பர் 7ம் தேதி 1999ம் ஆண்டு வெளிவந்த படம் 'முதல்வன்'. இன்றுடன் இப்படம் 25வது ஆண்டைத் தொடுகிறது.
80, 90களில் அரசியல் கலந்த படங்கள் எப்போதாவது ஒரு முறைதான் வரும். மணிவண்ணன் போன்ற ஒரு சிலரே அரசியலை தொட்டனர். மற்றவர்கள் அதிகம் தொடாமல் கமர்ஷியல் பாதையில் மட்டுமே பயணியத்த காலம் அது. 93ல் வெளிவந்த 'ஜென்டில்மேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகான ஷங்கர் அவரது ஒவ்வொரு படங்களையும் பிரம்மாண்டப் படைப்புகளாகத்தான் எடுப்பார். அதே சமயம் அவற்றின் பின்னணியில் சமூகம் சார்ந்த பிரச்சனைகள் மையமாக இருக்கும்.
அவரது ஐந்தாவது படமாக வந்த 'முதல்வன்' படம் ஒரு அதிரடியான அரசியல் படமாக இருந்தது. முதல்வரின் ஆளும் கட்சியினர் செய்த ஒரு அராஜகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் மீடியாவில் வேலை செய்யும் அர்ஜூன். அதன்பின் முதல்வரையே நேரடியாக பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த பேட்டி வாக்குவாதத்தில் போய், ஒரு நாள் முதல்வராக அர்ஜூன் இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அந்த ஒரு நாளில் அவர் செய்யும் அதிரடிகள், அதன்பின் அவருக்குக் கிடைக்கும் எதிர்ப்புகள் ஆகியவைதான் படத்தின் கதை.
100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரு படம். ஷங்கர் - அர்ஜூன் கூட்டணி இணைந்த 'ஜென்டில்மேன்', 'முதல்வன்' இரண்டு படங்களுமே பெரும் வெற்றிப் படங்கள். அப்போது அர்ஜூனை விடவும் முன்னணியில் இருந்த ஹீரோக்களை வைத்து படம் பண்ணாமல் அர்ஜூனுக்கு வாய்ப்பு கொடுத்து அவருடைய படங்களில் இந்த இரண்டு படங்களையும் முதன்மைப் படங்களாக மாற்றி வைத்தார் இயக்குனர் ஷங்கர்.
ஏஆர் ரஹ்மன் இசையில் 'முதல்வன்' படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை. 'முதல்வனே… முதல்வனே...' பாடலின் கிராபிக்ஸ் காட்சிகள் அப்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியவை.
தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த அரசியல் படங்களில் 'முதல்வன்' படத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு.