புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் சிலம்பரசனும் ஒருவர். குழந்தையாக இருந்த போதே அவரது அப்பா டி ராஜேந்தர் இயக்கிய 'உறவைக் காத்த கிளி' படத்தில் நடித்துள்ளார். அதன் பின் குழந்தை நட்சத்திரமாக பத்து படங்களில் நடித்திருப்பார். அவற்றில் 'எங்க வீட்டு வேலன்' படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அப்போதே 'லிட்டில் சூப்பர்ஸ்டார்' என்ற பட்டத்துடன்தான் அவரது பெயர் டைட்டிலில் இடம் பெறும்.
டீன் ஏஜ் வயதில் 'மோனிஷா என் மோனலிசா' மற்றும் 'சொன்னால்தான் காதலா' ஆகிய படங்களில் பாடல்களில் மட்டும் வந்து நடனமாடி நடித்தார்.
அதன் பிறகு கதாநாயகனாக அவர் அறிமுகமான படம் 'காதல் அழிவதில்லை'. டி ராஜேந்தர் இயக்கிய அந்தப் படம் 2002ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி வெளியானது. இன்றுடன் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க வந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த 21 வருடங்களில் 25 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவற்றில், சிலம்பரசன் கதாநாயகனாகவும் நடித்து இயக்குனராகவும் அறிமுகமான 'வல்லவன் (2006), அதற்கு முன் ‛மன்மதன் (2004), 'விண்ணைத் தாண்டி வருவாயா (2010),' 'செக்கச் சிவந்த வானம் (2018)', 'மாநாடு (2021), 'வெந்து தணிந்தது காடு' (2022), பத்து தல (2023) ஆகிய படங்கள் குறிப்பிட வேண்டிய முக்கியப் படங்கள்.
அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தயார்படுத்தி வருகிறார் சிலம்பரசன்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்குப் பிறகு இயக்கம், இசை, பாடகர் என தனித் திறமைகள் கொண்ட கதாநாயகன் சிலம்பரசன்.