ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் 'சேனாபதி' கதாபாத்திரம் மட்டுமே கமல்ஹாசனின் கதாபாத்திரமாக இடம் பெற்றுள்ளது. முதல் பாகத்தில் அப்பா சேனாபதி (கமல்ஹாசன் 1) கதாபாத்திரம் தனது மகன் சந்துருவை (கமல்ஹாசன் 2) கொலை செய்வதுடன் படம் முடியும்.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகத்தான் இந்த 'இந்தியன் 2' இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் அறிமுக வீடியோவின் முதலிலேயே எங்கோ ஒரு வெளிநாட்டில் இருக்கும் சேனாபதி, “எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன், இந்தியனுக்கு சாவே கிடையாது,” என வசனம் பேசுகிறார்.
'இந்தியன்' படத்தின் முதல் பாகம் 1996ம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாம் பாகம் 27 வருடங்கள் கழித்து வெளிவர உள்ளது. சேனாபதி கதாபாத்திரம் 1918ம் ஆண்டு பிறந்தவர் என காட்டப்பட்டது. சுதந்திரப் போராட்டத்திலும் பங்கு பெற்றவர். இப்போது 2023ம் வருடம், அப்படியென்றால் அவருடைய வயது 105 ஆண்டுகள். படத்தில் அத்தனை வயது கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா அல்லது வேறு ஒரு காரணம் எதையும் இக்கதாபாத்திரத்திற்காக இயக்குனர் ஷங்கர் வைத்துள்ளாரா என்பது படம் வந்தால்தான் தெரியும்.