கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
விலங்குகளிலேயே அதிக அறிவு கொண்டது குரங்கு. அது மனிதனை போன்றே சிந்திக்கவும், பேசவும் ஆரம்பித்தால் என்ன ஆகும் என்ற ஒரு கேள்வியில் உருவானது 'பிளானட் ஆப் தி ஏப்ஸ்' படங்கள். 1968ம் ஆண்டில் முதல் படம் உருவானது. அதன்பிறகு வெவ்வேறு டைட்டில்களில் 3 படங்கள் வந்தன. 2011ம் ஆண்டு மீண்டும் நவீன தொழில்நுட்பத்தில் உருவான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு பல்வேறு தலைப்புகளில் இதுவரை 3 பாகங்கள் வெளிவந்துள்ளன. தற்போது இதன் 4வது பாகம் 'கிங்டம் ஆப் தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்ற பெயரில் வெளிவருகிறது.
இந்த பாகத்தில் மனிதர்களிடம் தனது தனி ராஜ்யத்தை இழந்த ஏப்ஸ்கள். மனிதர்களுக்கு அடிமையாக வேலை செய்கிறது. மனிதர்களிடமிருந்து விடுதலை அடைந்து மீண்டும் தங்களது சாம்ராஜ்யத்தை (கிங்டம்) எப்படி நிறுவுகிறார்கள் என்பதுதான் கதை. தற்போது இதன் டிரைலர் ஆங்கிலம் மட்டுமல்லாது இந்தியாவில் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வெஸ் பால் இயக்கியுள்ளார். ஓவன் டீக் , ப்ரேயா ஆலன், கெவின் டுராண்ட் , பீட்டர் மேகன் மற்றும் வில்லியம் ஹெச்.மேசி ஆகியோர் அனிமேஷன் கேரக்டர்களுக்கு உருவமும், குரலும் கொடுத்துள்ளனர்.
டுவன்டின்த் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்திய திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. அடுத்த ஆண்டின் துவகத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.