நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்த 'ரெய்டு' படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக படம் பற்றி விக்ரம் பிரபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
'டாணாக்காரன்' படத்திற்கு பிறகு நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது. ஏற்கெனவே 'புலிகுத்தி பாண்டி' படத்தில் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். 'வெள்ளக்கார துரை' படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். தற்போது நாங்கள் மூவரும் இணைந்திருக்கிறோம். இது சிவராஜ்குமார் நடித்த 'தகரு' என்ற கன்னட படத்தின் ரீமேக். இதற்காக அந்த படத்தை பார்த்தேன். சிவராஜ்குமார் மாஸ் ஹீரோ என்பதால் அவர் ஸ்டைலில் நடித்திருந்தார். நான் எனக்கு ஏற்ற வகையில் அந்த கேரக்டரை மாற்றிக் கொண்டேன். எந்த விதத்திலும் அவரை காப்பி அடிக்கவில்லை. அடிக்கவும் முடியாது.
டாணாக்காரன் படத்திற்கு பிறகு போலீஸ் வேடங்களாகவே வந்தது. அதை தவிர்த்து வந்தேன். இந்த படத்தின் கதை பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். தமிழுக்காக சின்ன சின்ன மாற்றங்களை செய்திருக்கிறோம். கடைசியாக நடித்த 'இறுகப்பற்று' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இது இருக்கும் என்றார்.