'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு | கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஆர்யா. நடிப்பு தாண்டி தயாரிப்பாளராகவும் உள்ள இவர் நடிகை சாயிஷாவை காதலித்து 2019ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். சினிமா தாண்டி ஆர்யா சில தொழில்களும் செய்து வருகிறார். குறிப்பாக சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் 'ஸி ஷெல்' என்ற பெயரில் உணவகம் நடத்தினார்.
இந்நிலையில் இந்த உணவகங்களில் இன்று(ஜூன் 18) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு சொந்தமான உணவு என்பதால் ஆர்யாவின் அண்ணா நகர் வீட்டிலும் ரெய்டு என தகவல் பரவ, மீடியாவினர் குவிந்தனர்.
இதுபற்றி ஆர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‛‛சென்னையில் ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு ஒருவருக்கு சொந்தமானது'' என தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உணவகத்தை கேரளா மாநிலம் தலச்சேரியை சேர்ந்த மூசா என்பவரிடம் ஆர்யா குடும்பம் விற்றுவிட்டார்களாம். ஆர்யா குடும்ப உணவகம் என பெயர் இருந்ததால் ஆர்யா உணவகத்தில் ரெய்டு என செய்தி பரவி விட்டது.