மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1950, 60களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரும் மிக மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும்தான் அப்போதைய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர்கள்.
எம்ஜிஆர் வியாபார ரீதியிலான படங்களில் நடித்து வெற்றி பெற, சிவாஜி கணேசன் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று குடும்பத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வந்தார். இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டிதான் அப்போது இருந்தது.
1964ம் ஆண்டு தீபாவளி தினமான நவம்பர் 3ம் தேதி எம்ஜிஆர் நடித்த 'படகோட்டி', சிவாஜி கணேசன் நடித்த 'நவராத்திரி', 'முரடன் முத்து', எஸ்எஸ் ராஜேந்திரன் நடித்த 'உல்லாச பயணம்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
'படகோட்டி' படத்தில் எம்ஜிஆர் மீனவர் வேடத்தில் நடித்திருந்தார். ஈஸ்ட்மென் கலரில் இந்த திரைப்படம் உருவானது. எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை, இன்றும் பலரது வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
'நவராத்திரி' படத்தில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்திருந்தார். அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படமும் வியாபார ரீதியாக வெற்றியை பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி போட்டியில் 'படகோட்டி' படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜி நடித்து வெளிவந்த மற்றொரு படமான 'முரடன் முத்து' படம் வெற்றி பெறாமல் போனது.
தீபாவளி போட்டியில் அதிக வசூலைக் குவித்து போட்டியில் முந்தினார் எம்ஜிஆர்.