அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியானது. தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் திரையிட அந்தப் படத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால், அந்த ஆறு நாட்களிலேயே பலரும் படத்தைப் பார்த்துவிட்டனர். அதன்பின் கடந்த வார சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் சில தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகியுள்ளது.
இந்த வாரத்தில் படத்தைப் பார்க்கத் தியேட்டர்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்றாலும் முன்பதிவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பல தியேட்டர்களில் ஒரு வரிசை கூட முன்பதிவு ஆகாமல்தான் உள்ளது.
அடுத்த வெள்ளிக்கிழமை தீபாவளி படங்கள் வெளிவரும் வரை தியேட்டர்காரர்களுக்கும் வேறு படங்கள் இல்லை. எனவே, இரண்டு வாரத்தைக் கடந்தாலும் வேறு வழியில்லாமல் 'லியோ' படத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
12 நாட்களில் இப்படம் 540 கோடி வசூலைக் கடந்ததாக நான்கு நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்கள். தற்போது படம் 550 கோடி வசூலைக் கடந்திருக்கலாம் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் கடந்தது போல 'லியோ' படம் கடக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கிறார்கள்.