விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

நடிகர் திலகம் சிவாஜி அபூர்வமாக சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் ஆகியவை முக்கியமான படங்கள், அதிகம் அறியப்படாத இன்னொரு படமும் உண்டு அது 'பெண்ணின் பெருமை'.
பெங்காலி எழுத்தாளர் மணிலால் பானர்ஜி எழுதிய 'ஸ்வயம்சித்தா'வை 'அர்தங்கி' என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார்  புல்லையா. படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் 'பெண்ணின் பெருமை' என்ற பெயரில் இயக்கினார்.
இதில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைத்திருந்தனர்.
ஒரு ஜமீன்தாரின் முதல் தாரத்து மகனான ஜெமினி கணேசனை துன்புறுத்தும் இரண்டாவது தாரத்து மகனாக சிவாஜி நடித்தார். பல வழிகளில் அவரை துன்புறுத்தும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார்.
முன்பெல்லாம் வில்லன் என்றால் முறுக்கு மீசை, உருட்டும் கண்கள், கத்தி பேசும் வசனம் இதுதான் அடையாளமாக இருந்தது. இதனை முதலில் மாற்றியவர் சிவாஜி, சரித்திர படமான 'உத்தம வில்லனில்' ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். சமூக படங்களில் 'பெண்ணின் பெருமை'யில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான முதல் வில்லன் சிவாஜிதான்.