தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .
இதன் முதல் பாகத்தில் ராம் பொத்தினேனி தனது உடலை மெருகேற்றி சிக்ஸ்பேக் வைத்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் டபுள் ஐ ஸ்மார்ட் படத்திற்காக மீண்டும் ராம் பொத்தினேனி சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இந்த போட்டோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு இப்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.