அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பார்த்திபன் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛வாவென வாய்ப்பிழந்து வரவேற்று வாய் நனைய முத்தமிட்டு, இறுதிவரை இருக்க விரும்பி இருக அணைத்தாலும், திட்டமிட்டபடி சட்டென விட்டு விலகி சென்று விடும் சென்ற வினாடிகள்.
தும்பை பூவின் மீது தூய்மையான பனித்துளி பறந்து, தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதும் உண்டு. இசையை விட தூய்மையானது எது. சென்ற படத்தில் ரஹ்மானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான் இமான். அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் ஐந்து பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில். மைனாவின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்து கொண்டு இருந்தது இனிமை இசையாய். ஓகே டைட்டில் அறிவிப்போம் விரைவில்...'' என்று பதிவிட்டு, டி. இமான் கம்போசிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.