ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் மூத்த நடிகையாக வலம் வருகிறார் சத்ய ப்ரியா. தற்போது எதிர்நீச்சல் தொடரில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் கோபமான மாமியாராக மிரட்டி வருகிறார். ஆனால், நிஜத்தில் சத்ய ப்ரியா பாசமான மாமியார் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது மருமகள் அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர். தனது மருமகளுக்கு மாமியாராக இல்லாமல் தாயாக இருந்துவரும் சத்ய ப்ரியா அண்மையில் தனது மகன், மருமகளுடன் பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மகனுடன் பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ள சத்ய ப்ரியா அங்கே ஈபிள் டவர் முன் தனது மகனுடன் க்யூட்டாக நடனமாடி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், 'நீங்கள் ஹீரோக்களை வளர்க்க வேண்டாம். மகன்களை வளருங்கள். நீங்கள் அவர்களை மகனாக நடத்தினால் அவர்களே ஹீரோக்களாக மாறுவார்கள்' என்று வால்டர் எம். சிர்ராவின் பிரபலமான வார்த்தைகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.