மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'. இதில் சஞ்சய்தத், அர்ஜூன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின் உள்பட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது. அதில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை சர்ச்சை ஆனது.
இந்தநிலையில் 'லியோ' படம் தணிக்கைக்கு சென்றது. இதில் 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழு பட்டியலிட்டுள்ளது. படத்தில் விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் 'பீப்' ஒலி இடம் பெற வேண்டும். மேலும் கெட்டவார்த்தைகள் வரும் இடங்களிலும் இதனை பின்பற்ற வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெற செய்ய வேண்டும். ரத்தம் தெறிக்கும் சில சண்டை காட்சிகளை நீக்க வேண்டும். இல்லாவிட்டடால் நீளத்தை குறைத்தோ, அல்லது பிளர் செய்தோ மாற்றிட வேண்டும், என்பது உள்பட 13 திருத்தங்களை செய்ய அறிவுறுத்தி உள்ளது. இந்த பட்டடியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.