குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'லியோ' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அப்படத்திற்கான அனைத்து வேலைகளையும் அனிருத் முடித்துவிட்டார் என்றே தெரிகிறது. நேற்று மாலை டுவிட்டர் தளத்தில் அவர், “லியோ' எனப் பதிவிட்டு 'பயர் (நெருப்பு)' எமோஜி 5, 'எக்ஸ்பிளோஷன் (வெடிப்பது)' எமோஜி 5, 'டிராபி (கோப்பை)' எமோஜி 5” என மட்டும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்பு, ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்காக, 'டிராபி' எமோஜி 3, 'பயர்' எமோஜி 3, 'கத்தி' எமோஜி 3, எனவும், ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படத்திற்கு “ஜெயிலர்' எனப் பதிவிட்டு, 'பிளாஸ்ட்' எமோஜி 3, 'டிராபி' எமோஜி 3, 'ரைசிங் ஹேண்ட்ஸ்' எமோஜி 3, என பதிவிட்டிருந்தார்.
'ஜவான், ஜெயிலர்' படங்களை விட கூடுதலான எமோஜிக்களை 'லியோ' படத்திற்காக அனிருத் பதிவிட்டிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த இரண்டு படங்களை விடவும், 'லியோ' படம் சிறப்பாக உள்ளது என்பதைக் குறிக்கவே அனிருத் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என அவர்கள் அர்த்தம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அனிருத்தின் 'லியோ' பற்றி எமோஜி பதிவிற்கு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன. 46 லட்சம் பேர் அதைப் பார்வையிட்டுள்ளார்கள்.