ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மும்பை நடிகையான பூஜா ஹெக்டே, தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். அதோடு தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருந்தார். பின்னர் விஜய் நடித்த பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தவருக்கு தமிழில் அந்த இரண்டாவது படமும் எதிர்பார்த்து வெற்றியை கொடுக்காத நிலையில், தெலுங்கில் பிரபாஸ் உடன் நடித்த ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் நடித்த ஆச்சார்யா போன்ற படங்களும் அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
தற்போது ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே அடுத்தபடியாக ஹிந்தியில் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்கப் போகிறார். இதற்காக ஒரு பயிற்சியாளர் மூலம் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் பூஜா ஹெக்டே.