பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்திருக்கும் கமல்ஹாசன், அடுத்தபடியாக வினோத் இயக்கும் தனது 233வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பது யார் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு என்ற படத்திற்கு இசையமைத்தார் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த வகையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல் படத்துக்கு அவர் இசையமைக்க போகிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.