டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

வருகிற ஜனவரி மாதம் வரும் பொங்கல் அன்று பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பல தமிழ் படங்கள் வெளிவருகிறது. அவற்றோடு பிற மொழிகளில் தயாராகும் பான் இந்தியா படங்களும் வெளியாகிறது. தற்போது வெங்கடேஷ் நடித்து வரும் பான் இந்தியா படமான 'சைந்தவ்' பொங்கல் பண்டிகைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கடேஷின் 75வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் வெங்கட் பொயனபள்ளி தயாரித்துள்ளார். வெங்கடேஷுடன் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை எஸ் மணிகண்டன் மேற்கொண்டுள்ளார்.




