விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா | பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இரு வேடங்களில் நடிக்க, டைம் டிராவல் கதையாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமானது.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் வெற்றி பெறும் என்று படம் வெளியாவதற்கு முன்பே சொன்னார்கள். அது போலவே படமும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை. அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் 60 கோடி வரை வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம்.
இப்போது அந்த வசூலை 'மார்க் ஆண்டனி' முறியடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். விஷாலின் முதல் 100 கோடி படமாக இந்தப் படம் அமையப் போகிறது.