2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தமிழில் ஆர்யா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் என்ற படத்தில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். அதையடுத்து தாண்டவம், ஐ, தெறி, 2.0 என பல படங்களில் நடித்தார். மேலும் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்த எமி, அவரை திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்றுக் கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். அதையடுத்து தற்போது எட் வெஸ்ட் விக் என்ற நடிகரை காதலித்து வருகிறார். அவருடன் தான் டேட்டிங் செல்லும் புகைப்படங்களையும் தொடர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்சன்.
இந்த நிலையில் தற்போது தனது காதலருடன் தான் போட்டோ சூட் நடத்தியுள்ள சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார். அதில், தனது ஹேர் ஸ்டைலை முழுமையாக மாற்றி இருக்கிறார். அவரது முகத்திலும் ஏகப்பட்ட மாற்றம் தெரிகிறது. இதை பார்த்து, ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கும் எமி ஜாக்சன், தனது முகத்திலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். அதனால் தான் அவரது முகத்தில் இவ்வளவு மாற்றம் என்றும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.