ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

விஜய் இயக்கிய 'மதராசப்பட்டிணம்' படத்தில் ஆங்கிலேயப் பெண்ணாகவே நடித்து அறிமுகமானவர் ஆங்கிலேயே மாடலான எமி ஜாக்சன். அந்தப் படம் அவருக்கு சிறந்த பெயரைப் பெற்றுத் தந்தது. அதன்பின் தமிழில், “ஐ, 2.0, தெறி, கெத்து, தங்கமகன், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்களில் நடித்தார். ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஜார்ஜ் பனாயிட்டோ என்பவரைக் காதலித்து வந்தார். அவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை. ஆனாலும் 2019ம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானார் எமி. அதன் பின் அவர்கள் சீக்கிரத்திலேயே பிரிந்துவிட்டார்கள். தனது ஆண் குழந்தையை தனியாக வளர்த்து வந்தார் எமி.

அடுத்து ஹாலிவுட் நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி சுற்றுலா சென்ற புகைப்படங்களை எமி வெளியிட்டார். சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இத்தாலி நாட்டில் உள்ள காசெல்லோ டி ரோக்கோ நகரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.
திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து 'வாழ்க்கையின் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.