டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
முன்னணி நடிகையான நயன்தாரா தனது நடிப்பு சம்பாத்தியத்தில் இருந்து கிடைத்த வருமானத்தை பலவற்றில் முதலீடு செய்து வருகிறார். சினிமாவில் நடிப்பதோடு விளம்பர படங்களிலும் நடிக்கிறார். சில நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார். இந்த நிலையில் சிங்கப்பூர் தொழில் அதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தை தொடங்குகிறார். மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் வருகிற 29ம் தேதியன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. தொடர்ந்து கோலாம்பூரில் நடக்கும் அறிமுக விழாவிலும் நயன்தாரா கலந்து கொள்கிறார்.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனும் இந்த நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்துள்ளார். தற்போது அந்த நிறுவனத்தின் புரமோசனுக்காக எடுக்கப்பட்டுள்ள படங்களை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
“நயன்தாரா எப்போதுமே திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறவர். தனக்கு வயதாவதை உணர்ந்தும், இனி பட வாய்ப்புகள் குறையும் என்பதை உணர்ந்தும் அவர் தொழில் நுறையில் ஆர்வம் காட்டி வருகிறார்” என்கிறார்கள்.