இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் அனுராக் காஷ்யப். தமிழ் படங்களின் மீது ஆர்வம் கொண்டவர். தமிழில் வெளிவந்த 'சுப்பிரமணியபுரம்' படத்தை ஆதாரமாக கொண்டுதான் புகழ்பெற்ற 'கேங்ஸ் ஆப் வசிப்பூர்' படத்தை இயக்கினார். அதன்பிறகு 'இமைக்கா நொடிகள்' படத்தில் நயன்தாராவிற்கு வில்லனாக நடித்தார், தற்போது 'லியோ'வில் விஜய்க்கு வில்லனாகவும், 'மஹாராஜா'வில் விஜய்சேதுபதிக்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.
இதுதவிர 'ஒன் 2 ஒன்' என்ற படத்தில் சுந்தர்.சிக்கும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கே.திருஞானம் இயக்கி உள்ளார். திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான 'பரமபதம் விளையாட்டு' படத்தை தொடர்ந்து இயக்குனர் திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. விஜய் வர்மன் மற்றும் நீது சந்திரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.