புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்து, கடந்த மாதம் 25ம் தேதியன்று வெளியான படம் 'அடியே'. விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், கவுரி கிஷன், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தின் நாயகி கவுரி கிஷன் பேசியதாவது : இந்த படத்தில் நான் நடித்த செந்தாழினி கேரக்டர் என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம்தான் என நம்பினேன்.
ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, 'ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்' என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
அடுத்து வெளியாகவிருக்கும் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் 'போட்' எனும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்பு கற்பனையும், காட்சி கற்பனையும்தான் அடியே. அவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்ற இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.