சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஜி.வி.பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்கள் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது ஜான் பீட்டரும் 'படவா' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இவர் ரகசிய சிநேகிதியே, வஞ்சகன், மதுரை சம்பவம், மிஸ்டர்.ராஸ்கல், ஒத்திகை, வண்ண ஜிகினா, சவுகார் பேட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
படத்தின் நாயகனாக விமலும், ஸ்ரீதா நாயகியாகவும், 'கேஜிஎப்' புகழ் ராம் வில்லனாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி, சாம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.வி.நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விமலும், சூரியும் இணைந்து நடித்துள்ளனர். ஜான் பீட்டர் இசை அமைத்துள்ளார்.