2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்காக நடத்தப்பட்ட குதிரை பந்தயம் | பிளாஷ்பேக்: 100 தியேட்டர்களில் வெளியான முதல் படம் | ஷாருக்கான் பிறந்தநாளில் ‛கிங்' பட முதல் பார்வை | ஜனவரியில் துவங்கும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படம் |
மலையாளத்தில் ‛ககனச்சாரி, பொன்மேன்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த அஜித் விநாயகாக பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு டைட்டில் வைக்கப்படாமலேயே 45 நாட்களில் ஒரே மூச்சாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
விமல் நாயகனாகவும், முல்லை அரசி நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தை இரட்டையர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கி உள்ளனர், கிராமப்புற பின்னணியில், பேமிலி காமெடி எண்டர்டெயினராக படம் உருவாகி உள்ளது.
சேத்தன், பருத்திவீரன் சரவணன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். 'பார்க்கிங்' பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.