பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் |

செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் 2004ல் வெளிவந்த படம் '7 ஜி ரெயின்போ காலனி'. இப்படம் தெலுங்கில் '7 ஜி பிருந்தாவன் காலனி' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலுமே படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
'7 ஜி பிருந்தாவன் காலனி' படம் மீண்டும் செப்., 22ல் ரீ-ரிலீஸ் ஆகிறது. இது பற்றிய பதிவொன்றை நேற்று செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் சோனியா அகர்வால் பெயரையும் சேர்த்து அவர் 'டேக்' செய்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. செல்வராகவன், சோனியா அகர்வால் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தனர்.
ஒரு வாரம் முன்பு இப்படத்தின் ரீ-ரிலீஸ் பற்றி சோனியா அகர்வால் முதலில் பதிவிட்டிருந்த போது, செல்வராகவன் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால், செல்வராகவன் நேற்று பெருந்தன்மையுடன் சோனியா பெயைரை டேக் செய்திருந்தார். அதை சோனியாவும் ரீபோஸ்ட் செய்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் படங்களில் முக்கியமான படம் '7 ஜி ரெயின்போ காலனி'. தமிழிலும் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதனிடையே ரீ-ரிலீஸ் படத்திற்கு அதற்குள் ஒரு வாரம் முன்னதாகவே காலை 8 மணி சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டது.




