கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு |

பரதன் இயக்கத்தில் கமல், சிவாஜி, ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு, தலைவாசல் விஜய், சங்கிலி முருகன் உள்ளிட்டோர் நடித்த படம் ‛தேவர் மகன்'. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. 1992ல் அக்., 25ல் அன்று வந்த தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. 5 தேசிய விருதுகளை வென்றது. மேலும் அன்றைக்கு இந்தியா சார்பில் வெளிநாட்டு பிரிவு சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது.
‛தேவர் மகன்' படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி கமலின் ராஜ்கமல் நிறுவனம் எக்ஸ் தளத்தில், ‛‛என் குழந்தைக்கு வயது 33. அதை உயிருடனும் ஆரோக்கியமாகவும் வைத்திருந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி, உங்கள் நான்'' என கமல் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.




