படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் | பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் |
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். என்றாலும் இதுவரை மகனின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லி, நேற்று ஜவான் திரைக்கு வந்த நிலையில் , தனது மகன் மீர் தன்னுடைய மார்பில் படுத்து தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜவான் படவேலைகளில் பிஸியாக இருந்ததால் எனது மகனுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறியிருந்த அட்லீ, தற்போது இன்னும் நான்கு மாதங்களுக்கு தனது மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.