லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை அனுஷ்கா அதன்பிறகு வந்த இத்தனை வருடங்களில் தனக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார் என்றே சொல்லலாம். மீண்டும் தனது இடத்தை பிடிக்க போராடி வரும் அனுஷ்கா இளம் நடிகரான நவீன் பொலிஷெட்டிக்கு ஜோடியாக மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்காகவே இந்த படத்தின் சிறப்பு காட்சி ஒன்று திரையிட்டு காட்டப்பட்டது.
படம் பார்த்துவிட்டு பாராட்டிய சிரஞ்சீவி, "ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை அருமையான ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. நவீன் பொலிஷெட்டி இரட்டிப்பு சக்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்றைய இளைஞர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது. தேவசேனா அனுஷ்கா ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வந்தாலும் இப்போதும் அதே அழகுடன் இருக்கிறார். இந்த படத்தை முதல் ஆளாக பார்த்தவன் நான்.. அந்த தருணங்களை உவகையுடன் அனுபவித்தேன். அது மட்டுமல்ல இந்த படம் திரையரங்கில் வெளியாகும்போது ரசிகர்களுடன் இணைந்து மீண்டும் அதே போன்ற அனுபவத்தை பெற தயாராக இருக்கிறேன். இந்த படம் நூறு சதவீதம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கூறியுள்ளார்.