இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தமிழ் இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில், ஹிந்தி நடிகரான ஷாரூக்கான் நடித்து செப்டம்பர் 7ம் தேதி வெளிவர உள்ள ஹிந்திப் படம் 'ஜவான்'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாக உள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளதால் இந்த வாரம் வெளியாக உள்ள நேரடித் திரைப்படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் வெளியாகிறது. இதோடு, தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆகியுள்ள அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பெலிஷெட்டி' படமும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாக உள்ளது.
செப்டம்பர் 7ம் தேதி 'தமிழ்க்குடிமகன்', செப்டம்பர் 8ம் தேதி 'ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு வெய்ட்டுடா, நூடுல்ஸ், துடிக்கும் கரங்கள், ஸ்ட்ரைக்கர், பரிவர்த்தனை, அங்காரகன், ரெட் சான்டல்,' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஜவான்' படத்தால் இந்த நேரடிப் படங்கள் அதிக தியேட்டர்களில் வெளியாக முடியவில்லை.
தமிழில் வெளிவந்த 'ஜெயிலர்' படம் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அதனால், அந்தந்த மொழிகளில் வெளியான சில நேரடிப் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. 'ஜெயிலர்' படத்தைப் போன்றே 'ஜவான்' படமும் தென்னிந்தியாவில் சாதனை வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.