லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் இளம் நடிகர்களில் கவனிக்கத்தக்க நடிகராக இருப்பவர் நீரஜ் மாதவ். அடிப்படையில் டான்சரான இவர் கடந்த 2013ல் த்ரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் உதவியாளராக நடித்து கவனம் பெற்றார். அதை தொடர்ந்து நிவின்பாலி மற்றும் வினித் சீனிவாசன் ஆகியோரின் படங்களில் தவறாமல் முக்கிய இடம் பிடித்தார். கடந்த 2023ல் மலையாளத்தில் மூன்று ஹீரோக்களை ஒன்றிணைத்து உருவாகி வெளியான வெற்றி படமான ஆர் டி எக்ஸ் படத்தில் மூவரில் ஒருவராக நடித்து ஆக்ஷன் ஹீரோ முத்திரையும் பதித்திருந்தார்.
அதேபோல கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரது நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் இயக்குநர் அட்லி பாலிவுட்டில் ஷருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய போது அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் ஆனால் அதை மறுத்து விட்டதாகவும் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார் நீரஜ் மாதவ்.
இது பற்றி அவர் கூறும் போது, “ஜவான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அது அவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் அல்ல. அது மட்டுமல்ல அந்த சமயத்தில் எனக்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் கொஞ்சம் கூட இல்லாமல் இருந்தது. அதனால் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன். ஷாருக்கான் பக்கத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும், நீ அவரது படத்தையே மறுத்து விட்டாயே என்று கூறி எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் கூட என்னை திட்டினார்கள். ஆனால் பெரிதான எது ஒன்றையும் நான் இழந்ததாக நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார் நீரஜ் மாதவ்.