மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிப்பதை போன்று இரண்டு பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஒரே படத்தை தயாரிக்கும் டிரண்ட் எப்போதோ வந்து விட்டது. தற்போது தமிழ் சினிமாவிலும் அது தொடங்கி உள்ளது.
தென்னிந்திய திரைப்படத் துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இன்வேனியோ பிலிமிஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நான்கு புதிய திரைப்படங்களை தயாரிக்க உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' (தமிழ்), ராஷ்மிகா நடிக்கும் 'ரெயின்போ' (தெலுங்கு) திரைப்படங்களை இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளன. மற்ற இரு படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர்.பிரபு கூறும்போது "இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும்" என்றார்.