லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. அவருடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகளிலேயே பிரிந்தார்.
சமந்தா, விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள 'குஷி' படம் இந்த வாரம் வெளிவர உள்ளது. கடந்த வாரம் தெலுங்கில் வெளியான 'பாய்ஸ் ஹாஸ்டல்' என்ற படத்தின் சிறப்புக் காட்சி ஒன்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு படத்தைப் பார்த்தார் நாக சைதன்யா. இடைவேளையின் போது தியேட்டரில் சமந்தா நடித்துள்ள 'குஷி' படத்தின் டிரைலர் திரையிடப்பட்டது.
நாக சைதன்யா தியேட்டரில் இருந்த நிலையில் அந்த டிரைலர் திரையிடப்பட்டது. வேறு வழியில்லாமல் டிரைலரைப் பார்த்த நாக சைதன்யா, அதன்பின் 'பாய்ஸ் ஹாஸ்டல்' படத்தை முழுவதுமாகப் பார்க்காமல் பாதியிலேயே போய்விட்டாராம். 'குஷி' படத்தில் சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் நெருக்கமாக நடித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிவுக்குப் பின் சமந்தாவும், நாக சைதன்யாவும் மற்றவரது படங்களைப் பற்றி எந்த இடத்திலும் பேசிக் கொள்வதில்லை.