லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த 'குஷி' படம் வெளியாகி நேற்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 'வாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக விஜய் அப்போது ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் ஒரு ஜாலியான படத்தில் நடிக்க விரும்பினார். அப்போது அவர் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்கு கால்ஷீட் கொத்திருந்தார். ரத்தினம் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்து விஷயத்தை சொல்ல, அவரச அவசரமாக உருவான கதைதான் 'குஷி'.
படத்தில் முதலில் சிம்ரன் நடிப்பதாக இருந்தது. அவரது கால்ஷீட் பிரச்னை காரணமாக ஜோதிகா தேர்வானார். எளிய காதல் கதைதான், ஆனால் ஜோதிகாவின் மிரட்டல், உருட்டலான நடிப்பு, விஜயின் சாந்தமான நடிப்பு, யதார்த்தமான வசனங்கள் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தேவாவின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்டானது.
அதோடு ஷில்பா ஷெட்டி ஆடிய 'மேக்கரீனா' பாடலும், மும்தாஜ் ஆடிய 'கட்டிப்புடிடா' பாடலும் இளைஞர்களை கட்டி இழுக்க படம் வெள்ளிவிழாவை நோக்கி சென்று, 2000மாவது ஆண்டில் வெளியாகி இப்போது வெள்ளி விழா ஆண்டுக்கு வந்திருக்கிறது.
இந்தப் படம் பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கிலும், கணேஷ், ப்ரியாமணி நடிப்பில் கன்னடத்திலும், பர்தீன் கான், கரீனா கபூர் நடிப்பில் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.