ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு நடிகை சமந்தா காதலில் விழாமல் இருந்தார். ஆனால் சமீபகாலமாக அவர் பாலிவுட் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொரு உடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி இருப்பதுடன் அதுகுறித்த சமந்தாவின் கமெண்டுகள் அவர்களது காதலை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இதையடுத்து ராஜ் நிடிமொருவின் மனைவி ஷியாமலி டே, இன்ஸ்டாகிராமில் 'இந்த புகைப்படத்தை வைத்து என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என கோபமாக பதிவிட்டார்.
தற்போது மற்றொரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் ''நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கு கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். நீங்கள் செய்த தீய செயல்களுக்குக் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புறம் ரசிகர்கள் 'இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடதீர்கள்' என்று சமந்தாவுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். இன்னொரு புறம் 'உங்கள் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்' என்று ஷியாமலியையும் கேட் வருகிறார்கள்.