அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

புதிய படங்கள் ஓடுகிறதோ இல்லையோ ஏற்கனவே ஹிட் அடித்த பழைய படங்களை மீண்டும் வெளியிட்டு அதில் கல்லா கட்டுகின்றனர் அந்த படத்தை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே பார்த்த படங்கள் என்றாலும் ரசிகர்கள் அதனை விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய்யின் கில்லி, சச்சின் போன்ற படங்கள் ரீ-ரிலீஸாகி வரவேற்பை பெற்றன. அடுத்து குஷி, சிவகாசி படங்கள் ரீ-ரிலீஸாக உள்ளன.
2000ம் ஆண்டில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்து வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'குஷி'. அதேப்போல் 2005ம் ஆண்டில் பேரரசு இயக்கத்தில் விஜய், அசின், பிரகாஷ்ராஜ் நடித்து வெளியாகி ஹிட் அடித்த படம் 'சிவகாசி'. இந்த இரண்டு படங்களையும் சூர்யா மூவிஸ் மூலம் தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம். கடந்தாண்டு ஏ.எம்.ரத்னம் விஜய்யை வைத்து தயாரித்த கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்தார். அந்த படம் ரீ ரிலீஸில் அதிக வசூலித்த படமாக அமைந்தது. தற்போது குஷி மற்றும் சிவகாசி ஆகிய இரு படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய ஏ.எம். ரத்னம் திட்டமிட்டுள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என தெரிகிறது.