கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

விஜய்யின் உறவினரான விக்ராந்த் ஏற்கனவே இங்கு நடித்து வருகிறார். தற்போது அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் இருந்து ஒரு விக்ராந்த் தமிழுக்கு வருகிறார்.
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் விக்ராந்த் சினிமாவில் அறிமுகமாகிறார். 'ஸ்பார்க் லைப்'. என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். மெஹ்ரின் பிர்சாடா மற்றும் ருக்ஷார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். டேப் ப்ராக் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோ விக்ராந்தே இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியிருக்கிறார் . ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். நாசர், சுஹாசினி மணிரத்னம், வெண்ணேலா கிஷோர், சத்யா, பிரம்மாஜி, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சம்மக் சந்திரா, அன்னபூர்ணம்மா, ராஜா ரவீந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பையும் சமீபத்தில் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது படக்குழு. நவம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.