நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1983ல் வெளியான படம் துடிக்கும் கரங்கள். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு எஸ்பி பாலசுப்ரமணியம் இசையமைத்து இருந்தார். தற்போது 40 வருடங்கள் கழித்து இதே பெயரில் நடிகர் விமல் நடிக்கும் படம் தயாராகியுள்ளது. இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினார்கள்.
ஆனால்
படக்குழுவினர் மட்டுமல்லாது விழாவில் கலந்து கொண்ட சிறப்பு
விருந்தினர்களும் எந்த இடத்திலுமே ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவிக்கும்
விதமாகவோ அவரைப் பற்றியோ எந்த ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை.
பார்வையாளர்களில் ஒருவர்தான் இந்தப் படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு நன்றி
சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்த் பெயரை
வலுக்கட்டாயமாக பொது மேடைகளில் இழுத்து தங்களது படங்களை பலரும் புரமோஷன்
செய்து வரும் நிலையில் அவரது பட டைட்டிலிலேயே ஒரு படத்தை உருவாக்கி விட்டு
அவர் பற்றி ஒரு வார்த்தை கூட துடிக்கும் கரங்கள் படக்குழு பேசாதது
ஆச்சரியம் தான்.