நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

விஜய்யின் நெருங்கிய உறவினர் விக்ராந்த். அவரைப்போன்ற சாயலுடன் கற்க கசடற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு நினைத்து நினைத்து பார்த்தேன், நெஞ்சத்தை கிள்ளாதே, முதன் கனவே உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். சில படங்களில் நெகட்டிவ் ஷேட் உள்ள குணசித்ர வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடித்த பக்ரித் படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டாலும் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் சசிகுமார் நடிக்கும் காமென்மேன் படத்தில் சாத்தான் என்ற கொடூர வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை சத்யசிவா இயக்குகிறார். விக்ராந்துக்கென்று தனி டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவரது வில்லத்தனங்கள் சித்தரிக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் .செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் டி.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார்.