அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் எழுதிய கதையை தழுவி உருவாகும் படம் மஹாவீர்யார். நிவின் பாலி நடித்து அவரது நண்பர் சம்னாசுடன் இணைந்து தயாரிக்கிறார். அப்ரித் ஷைனி இயக்கும் இப்படத்தில் ஆஷிப் அலி, லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் ஷி குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு உள்பட பலர் நடித்துள்ளனர். சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான் சாப்ரா இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் அப்ரித் சைனி கூறியதாவது: இப்படம், பேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள், சட்ட புத்தகங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான பேரனுபவமாக இருக்கும். கொரோனா கட்டுப்பாடுகள் நிலவிய கடுமையான காலகட்டத்தில் ராஜஸ்தான், கேரளா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. என்றார்.
மலையாளத்தில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.