சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவான 1983 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் அப்ரிட் ஷைன். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' என்கிற வித்தியாசமான போலீஸ் படத்தையும் இயக்கினார். அதன்பிறகு அவர் இயக்கிய இரண்டு படங்களும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்தநிலையில் தனக்கு இரண்டு ஹிட் படங்களை கொடுத்து, தனது கேரியர் உயர காரணமான அப்ரிட் ஷைனுக்கு, தான் நடிக்கும் மகாவீர்யர் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார் நிவின்பாலி. மேலும் இந்தப்படத்தை நிவின்பாலியே தயாரித்தும் உள்ளார்.
இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தாடியும் ஜடாமுடியுமாக காட்சி தருகிறார் நிவின்பாலி. தெலுங்கில் வெளியான மகதீரா, ஷியாம் சிங்கா ராய் படங்களை போல வரலாற்று காலகட்டத்தில் நிகழ்ந்த கதையானது நிகழ்காலத்திலும் தொடர்வது போப்ன்று சூப்பர் நேச்சுரல் ஜானரில் இந்தப்படம் உருவாகியுள்ளது.