அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
மெம்மரி லாஸ் என்பது ஒரு நினைவு மறக்கும் நோயாகும். இது பொதுவாக முதியவர்களுக்கு ஏற்படக்கூடியது. அரிதாக மற்றவர்களையும் பாதிக்கும், மிகவும் அரிதாக குழந்தைகளை பாதிக்கும். அப்படி இந்த நோயால் பாதிக்கப்பட் ஆராதிகா என்ற சிறுமி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவரை நினைவில் மறக்கும் முன்பாக பார்க்க விரும்பி உள்ளார். அவரது பிறந்த நாளும் வந்தது. இதனால் அவர் "மம்முட்டி அங்கிள் என் பிறந்த நாளுக்கு என்னை பார்க்க வருவீர்களா?" என்று கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தாள். இந்த வீடியோ வைரல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்த மம்முட்டி மருத்துவமனைக்கு சென்று அந்த சிறுமியை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்னார். தற்போது மம்முட்டி ஆராதிகாவை சந்தித்த வீடியோ வைரலாகி உள்ளது.