ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேசுக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்து கடைசியாக வெளியான தெலுங்கு படமான குட்லக் சகியை மிகவும் எதிர்பார்த்தார். அதுவும் தியேட்டரில் போதிய வரவேற்பு இல்லாமல் வெளியான 15வது நாளில் ஓடிடி தளத்திற்கு வருகிறது.
நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப் செய்யப்பட்டுள்ளது. பலமுறை தள்ளி வைக்கப்பட்ட படம் கடந்த ஜனவரி 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கில் சர்காரு வாரி பட்டா, போலோ சங்கர் படங்களிலும், தமிழில் சாணி காகிதம் படத்திலும், மலையாளத்தில் வாஷி படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.