சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை |
விக்ரம், துருவ் விக்ரம் சிம்ரன் நடித்துள்ள படம் மஹான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடித்த நிலையில் இன்னொரு நாயகியாக வாணி போஜனும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வாணி போஜனும் சிலநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
ஆனால் படத்தில் அவர் நடித்த ஒரு காட்சி கூட இடம் பெறவில்லை. படம் ஏற்கெனவே இரண்டு மணி நேரம் 42 நிமிட நீளத்தை கொண்டிருப்பதால் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் மகான் 2 உருவாக வாய்ப்புள்ளதால் அதில் இவரது காட்சிகள் இடம் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.