பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

கொடைக்கானலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேத்துப்பாறை கிராம தலைவர் மகேந்திரன் புகார் ஒன்றை தெரிவித்தார். கொடைக்கானல் தாலுகாவில் உள்ள பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹாவும், பாரதி அண்ணா நகரில் நடிகர் பிரகாஷ்ராஜூவும் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், பிரகாஷ்ராஜ் சிமெண்டு சாலை அமைத்துள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அனுமதி இன்றி புதிய வீடு கட்டப்பட்டு வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.