கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

ரஜினி நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்றும், குழந்தைகளை இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வதாக இந்த காட்சிகள் அமைந்திருக்கிறது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "எல்லா திரைப்படங்களிலும் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதனை எப்படி வரைமுறைப்படுத்துவது. மேலும் படம் தணிக்கை செய்யப்பட்டுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. இது குறித்து மனுதாரருக்கு மாற்று கருத்து இருந்தால் தணிக்கை குழுவிற்கு மனு அனுப்பலாம். இந்த வழக்கு பொதுநல வழக்கு அல்ல மனுதாரர் தனது சுய விளம்பரத்திற்காக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.