சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் | மோகன்லால் பட ரீமேக்கில் நடிக்க விரும்பி இயக்குனரை நச்சரிக்கும் பஹத் பாசில் |
நாகசைதன்யா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் 'கஸ்டடி' என்ற படம் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கிய இந்த படம் தோல்வி அடைந்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் நாக சைதன்யா தனது அடுத்த படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த படத்தை மிகப்பெரிய வெற்றி பெற்ற கார்த்திகேயா, கார்த்திகேயா 2 படங்களை இயக்கிய சந்து மொன்டேட்டி இயக்குகிறார்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கி விட்டது. இது மீனவர்களின் வாழ்க்கை பின்னணியில் உருவாவதால் நாகசைதன்யாவும், இயக்குனரும் மீனவர்கள் வாழும் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அவர்களோடு பழகி தங்களை தயார் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நாயகிக்கும், நாயகனுக்கும் சமமான பங்களிப்பு இருப்பதால் நாயகி தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் மீனவப் பெண்ணாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக கீர்த்தி சுரேஷை ஒரு வாரம் வரை மீனவ பெண்களோடு தங்க வைக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.