ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
பிரபல தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் கடந்த 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தின் மூலம் தான் ஷங்கர் இயக்குநராக அறிமுகமானார். அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் குஞ்சுமோன் தற்போது தயாரித்து வருகிறார். இப்படத்தை கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்திற்கு இசை அமைக்கிறார். 'ஜென்டில்மேன்2' வின் கதாநாயகனாக சேத்தன் சீனு, கதாநாயகிகளாக நயந்தாரா சக்கரவர்த்தி, ப்ரியா லால் நடிக்கின்றனர்.
இதன் துவக்க விழா இன்று (ஆக.,19) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: சினிமா தொடங்கிய காலம் முதல் இந்திய சினிமா முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமா தற்போது சர்வதேச அளவில் திகழ்ந்து வருகிறது. அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர்களின் பங்கு முக்கியமானது.
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் பங்கு அதிகம். பொழுதுபோக்கு கடந்து சமூக அக்கறை கொண்ட படங்களை தமிழ் சினிமா கொடுத்து வருகிறது. ஜென்டில்மேன் படமும் அதற்கு ஒரு உதாரணம். குஞ்சுமோன் தயாரித்த நல்ல படங்கள் அதிகம். கீரவாணி 33 ஆண்டு காலமாக இசைத்துறையில் சாதித்து வருகிறார். இவருக்கு ஆஸ்கர் விருது எப்போதோ கிடைத்து இருக்க வேண்டியது, இது தாமதமாக கிடைத்துள்ளது. அவரை வாழ்த்த வயதில்லை. தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஜென்டில்மேன்-2 மிகப் பெரிய வெற்றியை பெற எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.